இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :3060 days ago
சாத்துார், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் காணிக்கை உண்டியல் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ஹரிகரன், செயல்அலுவலர் வில்வமூர்த்தி, முன்னாள் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூஜாரி முன்னிலையில் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. கோவில் ஊழியர்கள், சாய்பக்தர்கள் குழுவினர், தன்னார்வலர்கள், அலுவலர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். ரூபாய் 25 லட்சத்து 61 ஆயிரத்தி 284, தங்கம் 121 கிராம், வெள்ளி 351 கிராம் காணிக்கையாக கிடைத்தது.