உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஸ்திவாரம் தோண்டும்போது 4 சிவலிங்கங்கள் கண்டெடுப்பு

அஸ்திவாரம் தோண்டும்போது 4 சிவலிங்கங்கள் கண்டெடுப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே, அஸ்திவாரம் தோண்டும்போது, நான்கு சிவலிங்கங்கள் கிடைத்தன. நாகை மாவட்டம், குத்தாலம் தாலுகா, அனந்தநல்லூர் கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்டுவதற்காக, பொக்லைன் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணி நேற்று நடந்தது. அப்போது, பூமிக்கடியில் கல் மீது மோதுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியை தோண்டி பார்த்தபோது,  3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட, கருங்கல்லால் ஆன, நான்கு சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டது.

சிவலிங்கங்கள் கிடைத்தது குறித்து, குத்தாலம் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் யாரும் வராததால், நான்கு சிவலிங்கங்களும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு பூஜை செய்து, கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியில், பழங்கால கோவில் புதைந்துள்ளதா என்பது குறித்து,  தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !