ஸ்ரீவில்லிபுத்துாரில் பெரியாழ்வார் செப்புத்தேரோட்டம்
ADDED :3051 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பெரியாழ்வார் திருஆனி ஸ்வாதி திருவிழாவினை முன்னிட்டு செப்புத்தேரோட்டம் நடந்தது. வடபத்ரசயனர் சன்னதியில் ஜூன் 24ந் தேதி பெரியாழ்வார் திருஆனி ஸ்வாதி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு செப்புத்தேரில் பெரியாழ்வார் எழுந்தருளினார். ராஜீ பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் பக்தர்கள் தேரை இழுத்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, சுதர்சன் பட்டர், டி.எஸ்.பி., சங்கரேஸ்வரன், குரு ஞானசம்பந்தர் மேல்நிலை பள்ளி தாளாளர் கிருஷ்ணன், மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.