லண்டன் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3340 days ago
லண்டன்: லண்டன் ஈஸ்ட்ஹாம் மனோர்பார்க் முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை3) நடந்தது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். காலை 9:30 – 11:00 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஆனந்த விநாயகர், புவனேஸ்வரி அம்பாள், புவனேஸ்வரர், சிவகாமி, ஆனந்த நடராஜர், ஜெய துர்காதேவி, பத்மாவதி, வெங்கடேஸ்வரர், ஐயப்பன், குருவாயூரப்பன், நவக்கிரகம், ஆஞ்சநேயர், பைரவர் ஆகிய பரிவார தெய்வ சன்னதிகள் இங்குள்ளன. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தசதரிசன தீபாராதனை, மாலை 5:30 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம், வசந்த மண்டப பூஜை, சுவாமி புறப்பாடு நடக்கும். ஜூலை 4 முதல் ஆக.11 வரை தினமும் மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது. இதில் தினமும் காலை 10:00 மணிக்கு ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடக்கும்.