திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :3054 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது. கடலூர் அடுத்த சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று 30ம் தேதி வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி சக்தி கரகம் எடுத்து வந்து கொடியேற்றப்பட்டது.கடந்த 27 ம் தேதி காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து சுவாமி வீதி உலா நடந்தது. 28 ம் தேதி புதன்கிழமை இரவு 8:00 மணிக்கு அர்சுணன்,திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்து சுவாமி வீதி உலா நடந்தது. 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. 1ம் தேதி சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குவினர்கள் செய்திருந்தனர்.