சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3054 days ago
கீழக்கரை: சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் ஆனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. வெற்றிலை, துளசி மாலை, வெண்ணை, வடமாலை அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் ராம நாம சங்கீர்த்தனம், அனுமன் சாலீசா, சுந்தரகாண்டம் பாடி பஜனை செய்தனர். வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிகளவில் குவிந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பூஜைகளை ரெகுநாத பட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.