உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித ராயப்பர் சின்னப்பர் தேர்பவனி

புனித ராயப்பர் சின்னப்பர் தேர்பவனி

ஓமலூர்: புனித ராயப்பர் சின்னப்பர் அலங்கார தேர்பவனி கோலாகலமாக நடந்தது. ஓமலூர் அருகே, ஆர்.சி.செட்டிப்பட்டியில், புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயம் உள்ளது. அங்கு, கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும், தேவாலயத்தில் பங்கு தந்தையர்கள் திருப்பலி நடத்தினர். நேற்று முன்தினம் காலை, சேலம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் தலைமையில் திருப்பலி நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, புனித ராயப்பர் சின்னப்பர் சொரூபத்துடன் அலங்கார தேர்பவனி, தேவாலயத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, ஆலயத்தில் நிறைவடைத்தது. அப்போது, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, கிறிஸ்தவர்கள் பலர் ஊர்வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !