உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

புதுச்சேரி: விவேகானந்தா நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடந்தது. கதிர்காமம் விவேகானந்தா நகரில் வலம்புரி விநாயகர் ஆலயம், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், நவக்கிரகம், காலபைரவர், வீரபக்த ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளது. இக்கோவில் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையாட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை 7:15 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால சங்கு பூஜை, விசேஷ உபசார பூஜையும் தொடர்ந்து, 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !