பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவல்
ADDED :3032 days ago
தர்மபுரி: தர்மபுரி அருகே கொளகத்தூர் பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், ஹெலிகாப்டரில் இருந்து, கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீது, மலர் தூவப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 30ல், விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை நடந்தன. 1ல், யாக சாலை பூஜை, 108 மூலிகை ஹோமம், திருமுறை பாராயணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், அன்று மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. பின், பக்தர்கள் மீது, சிறிய ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பாபிஷேகம் முடிந்ததையொட்டி, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்க உள்ளது.