உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியானத்துக்கு தத்தாத்ரேயர்’ கோவில்: வரலாற்றில் பதிவான ஆற்றங்கரை

தியானத்துக்கு தத்தாத்ரேயர்’ கோவில்: வரலாற்றில் பதிவான ஆற்றங்கரை

கோவில் நகரமான கொழுமத்துக்கு சிறப்பு சேர்ப்பது, தியானத்தின் வலிமை சொல்லும் தத்தாத்ரேயர் கோவிலாகும். அமராவதி ஆற்றங்கரையின் அழகுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ள இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, தற்போதும் பொலிவுடன் காட்சியளிக்கிறது.  

ஆற்றங்கரையும்... தியானமும்...: அமராவதி ஆறும் அதன் கரைப்பகுதியும் மிகவும் எழில்கொஞ்சும் இடமாக இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் சோழர்களின் மேற்கு எல்லையாக இருந்த இந்தப்பகுதி கொங்குநாடு என அழைக்கப்பட்டது. கொங்கு நாட்டிலுள்ள அமராவதிநதி கரையோரம், பல கோவில்கள் கட்டப்பட்டன.  கட்டடக்கலைக்கும், சிற்ப கலைக்கும் சான்று கூறும் விதமாக அமைந்த இந்த கோவில்கள் பல சிறப்புகளை கொண்டவையாகும். இதில் குறிப்பிடத்தக்கதாக காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.  கற்றளி முறையில் கம்பீரமாக நிற்கும் கோவிலின் மீதும், சிவனின் மீதும் காதல் கொண்ட தத்தாத்ரேயர்’ என்ற சித்தர், கோவிலை

சுற்றியிருந்த வனத்தில் வாழத்தொடங்கினர். தினசரி சிவனை பூஜை செய்து வழிபட்டு, தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அமராவதி நதியின் கரையில் என பல இடங்களில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவது தத்தாத்ரேயரின் வழக்கம். சோழர்களுக்கு கப்பம் செலுத்தியபடி, கொமரலிங்கம் (குமரங்க பீமச்சதுர்வேதி மங்கலம்) பகுதியை ஆட்சி செய்த, குறுநில மன்னர் மானை வேட்டையாட அம்பு எய்த போது, மரநிழலில் தியானம் செய்து கொண்டிருந்த தத்தாத்ரேயரின் உடலுக்குள் தவறுதலாக பாய்ந்தது. அப்போது தத்தாத்ரேயர் மன்னரை அழைத்து, நான் பிழைப்பது அரிது, அதனால் நான் இறந்த பின்  காசிவிஸ்வநாதருக்கு முன் என்னை அடக்கம் செய்யுங்கள்,’’ என கூறியுள்ளார். இதற்கு மறுமொழி கூறிய மன்னர், எனது கவன குறைவால் ஏற்பட்ட இதற்கு பிராயசித்தமாக தங்களை அடக்கம் செய்யும் இடத்தில் கோவில் கட்டுகிறேன்,’’ என கண்கலங்க வாக்குறுதி கொடுத்தார்.  

கோவில்: விரும்பியபடி தத்தாத்ரேயர் கோவில் அருகில், அடக்கம் செய்யப்பட்டார். மன்னர் வாக்குறுதிப்படி கோவிலும் கட்டப்பட்டது. காசிவிஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் சுகவனக்குருக்கள் கூறுகையில், சிவனை நினைத்து தொடர் தியானம் செய்ததால் கோவிலுக்கு அருகிலேயே, சமாதி அடைந்தார். தத்தாத்ரேயர் கோவில் தினசரி காலை, 6:30 மணி முதல் திறந்திருக்கும். பக்தர்கள் அமைதியான முறையில் தியானம், பிரார்த்தனை செய்யலாம்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !