ஏரிகாத்த ராமர் கோவில் பிரம்மோற்சவம் ஆரம்பம்
ADDED :3031 days ago
மதுராந்தகம்: ஏரிகாத்த ராமர் கோவிலில் பிரம்மோற்சவம் கோலாகலமாக துவங்கியது. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம் நேற்று விமரிசையாகத்துவங்கியது. வரும், 15ம் தேதி வரை நடைபெறும் இந்த உற்சவத்தின் முதல் கட்டமாக, கொடி ஏற்றுதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சிம்ம வாகன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், த்வாஜரோஹண நிகழ்ச்சியில் பங்கேற்று கண்டு களித்தனர். இன்று காலை கருடசேவை நிகழ்ச்சியும், மாலை அனுமந்த வாகனமும் நடைபெறுகிறது.