ஆத்தூர் முருகனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3030 days ago
நரசிங்கபுரம்: ஆத்தூர் அருகே, முருகனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நரசிங்கபுரம், விநாயகபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அங்கு, மே, 14ல், கும்பாபி?ஷகம் நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜை, அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அங்கு திருச்செந்தூர் முருகன் கோவில் கட்டப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, முருகன் கோவில் மீதுள்ள கோபுரம், முருகன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபி?ஷகம் நடத்தினர். அதில், ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.