உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லக்கசந்திரா ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

லக்கசந்திரா ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

லக்கசந்திரா: லக்கசந்திரா ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 3ம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. விக்னேஸ்வர் பூஜை, புண்ணிய வாசனம், மஹா கணபதி ஹோமம், நுாதன பிம்பங்கள் பிரதிஷ்டை, கோபுர கலசங்கள் நிறுவுதல் ஆகியவை நடைபெற்றன. நேற்று காலையில், இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்கின. திருமறை, பாராயணம், விசேஷ சாந்தி, பூதசுத்தி லலிதா சகஸ்ரநாம பாராயணம், மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. இதில் விசேஷமாக, 108 மூலிகைகளால் யாகம், சாம வேத பாராயணம் நடைபெற்றது. இன்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்குகிறது. மூல மந்திரம், மாலா மந்திரம், காயத்ரி மந்திர யாகம், நாடி சந்தானம், யாத்ரா தானம், தீர்த்த கலசங்கள் புறப்பாடுக்கு பின், காலை, 9:00 மணிக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடை பெறுகிறது. இதை தொடர்ந்து, தச தானம், தசதரிசனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாத வினியோகம், சக்தி அழைப்பு, காலை, 11:30 மணிக்கு அச்சுவெல்ல கோட்டை, கரும்பு பந்தல், வெற்றிலை தோரணமும் வைத்து அமைக்கப்பட்ட மேடையில் ராமலிங்க சவுடேஸ்வரி சக்தி அம்மனை பிரதிஷ்டை செய்து, சிறப்பு அலங்கார பூஜை, மஹா தீபாராதனை நடத்தப்படுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில், மஹா ஜோதி அழைப்பு, இரவில், சவுடேஸ்வரி சக்தி அம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுடன் மஹா ஜோதியை பிரதிஷ்டை செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !