உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கோபுரத்தில் செடிகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கோபுரத்தில் செடிகள்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ராஜகோபுரத்தில் வளர துவங்கியுள்ள செடிகளால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், சேதமடையும் அபாயம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் நடந்து, கடந்த, 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, இக்கோவிலிலின், ராஜகோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இவற்றின், வேர் பகுதியால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, செடிகள் சிறிய அளவில் இருக்கும்போதே, அகற்ற வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !