கனகவல்லி தாயாருக்கு நாளை ஜஷே்டாபிஷேகம்
ADDED :3031 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஜஷே்டாபிஷேகம் நடைபெறும். கடந்த வாரம், ஜூலை 2ம் தேதி பெருமாளுக்கு ஜஷே்டாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, நாளை, 7ம் தேதி கனகவல்லி தாயாருக்கு ஜஷே்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹிருதாபநாசினி குளத்திலிருந்து, காலை, 5:30 மணிக்கு வெள்ளி குடங்களில் அர்ச்சகர்கள் தீர்த்தம் எடுத்து, நாலு வீதிகளில் ஊர்வலமாக கோவிலை வந்தடைவர். இதன் காரணமாக, அன்று, மாலை 4:00 மணிக்கு, மேல் தாயார், மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், எனவே, மாலை 5:30 மணிக்கு மேல், உற்சவர் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோஷ்டி தீரத்தம் வழங்கப்படும். உற்சவரை மட்டும் பக்தர்கள் தரிசிக்கலாம்.