உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம்

காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம்

காரைக்கால்: காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
 
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார்.63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.நேற்று காரைக்கால் அமையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை,நவமணி மகுடம்,ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். பின் புனிதவதியார் பட்டுபுடவை உடுத்தி மணமகள் கோலத்தில் எழுந்தளினார். பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது.

காலை 10மணிக்கு ஆலய குருக்கள் புனிதவதியாருக்கும் மாங்கல்யம் அணிவித்தார்.பின் மகா தீபாராதனை நடந்தது.திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சல்,கும்குமம்,மாங்கனியுடன் கூடிய தாம்பூல பை வழக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன்,எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன்,அசனா,கலெக்டர் கேசவன்,துணை மாவட்ட ஆட்சியர் மங்கலாட் தினேஷ், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைத்தம்பி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை 3மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கிறது.காலை 7.30 மணிக்கு பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியும்,காலை 9 மணிக்கு நான்கு திசையிலும் வேதபாராயணம் எதிரொளிக்க பவழக்கால் விமானத்தில் சிவபெருமாள் காவியுடை, ருத்திராட்சம் மாலையுடன் பிச்சாண்டவர் கோலத்தில் புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாரதனை செய்து.பின் வீட்டின் மாடிகளின் இருந்து மாங்கனி வீசும் வைபவம் நடைபெறுகிறது.மாலை 5 மணிக்கு அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை புனிதவதியார் அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.6 மணிக்கு பரதத்தர் உணவு அருந்த இல்லத்திற்கு வருதலும்.மாங்கனி ஒன்றை ருசித்த பரமதத்தர் மற்றொன்றை கேட்க,புனிதவதியார் இறைவனை வேண்டி மற்றொரு மாங்கனி பெற்று தரும் காட்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !