தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்
ADDED :3014 days ago
திருவண்ணாமலை: மழை வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 108 சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், ரமேஷ் குருக்கள் தலைமையில், 108 சிவாச்சாரியர்கள் பிரம்ம தீர்த்த குளத்தில் நேற்று காலை, 7:00 மணி முதல், 9:00மணி வரை, வருண ஜெபமும், குளக்கரையில் சிறப்பு யாக பூஜையும் செய்தனர். அதை தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட, கலச நீரை மூலவர் அருணாசலேஸ்வரர், மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.