திருப்பரங்குன்றம் கோயிலில் முப்பழ பூஜை
ADDED :3142 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழாவில் நேற்று முப்பழ பூஜை நடந்தது.ஜூன் 29ல் துவங்கிய திருவிழாவில் தினம் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயில் ஆஸ் தான மண்டபத்தை வலம் சென்று, திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழச்சியாக உச்சிகால பூஜையில், மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஷ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி யானை மண் டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.