உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி விநாயகர் கோவில்களில் சங்கடஹரசதுர்த்தி பூஜை

தர்மபுரி விநாயகர் கோவில்களில் சங்கடஹரசதுர்த்தி பூஜை

தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தவ. 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, அர்ச்சகர் சிவசுப்பிரமணியம் செய்தார். இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்திவிநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபி?ஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !