உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) (ராகுவால் வந்தது சனியால் தீர்ந்துவிடும்)

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) (ராகுவால் வந்தது சனியால் தீர்ந்துவிடும்)

கடமையுணர்வுடன் பணிபுரியும் கடக ராசி அன்பர்களே!

ராசிக்கு 2-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்குரிய பலன் குறைந்து போகலாம். 8-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது தற்போது 7-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் மனைவி வகையில் பிரச்னை ஏற்படலாம். எதிரி தொல்லை குறுக்கிடலாம்.சனி பகவான் தற்போது 5-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது அல்ல. ஆனால்  டிச. 18ல் 6-ம் இடத்திற்கு மாறுவதால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை ஏற்படும்.  ராகுவால் வந்த பிரச்னைகளை சனிபகவான் உடனுக்குடன் தீர்த்து வைப்பார். குருபகவான்  3-ம் இடத்தில் சாதகமற்று இருந்தாலும், அவரது பார்வை பலத்தால் சிரமம் குறையும். ஆக. 31-க்கு பிறகு 4-ம் இடத்திற்கு மாறுகிறார். இதனால் மன உளைச்சல் உறவினர் வகையில் வீண் பகை ஏற்படலாம். 2018 பிப். 13-க்குப் பிறகு இந்த நிலை மாறும்.

கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை –  டிசம்பர் பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆனால் திடீர் செலவு குறுக்கிடும்.  பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர் வகையில் நன்மை உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கும்  எண்ணம்  நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் வெளியூர் வாசம் ஏற்படலாம். பண விஷயத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம். பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம், வளர்ச்சி உண்டாகும்.  நெருப்பு தொடர்பாக பணிசெய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குருவின் பார்வையால் பதவி, சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். வருமானம் குறையாது. மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர்.

விவசாயிகள் முன்னேற்றம் அடைவர்.  மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை காணலாம். பெண்கள் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு  பெருமை கொள்வர். 2018 ஜனவரி – 2019 பிப்ரவரி உங்கள் ஆற்றல் மேம்பட்டு விளங்கும்.  குருபகவான் 2018 பிப். 13ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். அதன் பின் குடும்பவாழ்வில் குதூகலம் உண்டாகும்.  கணவன்- மனைவி இடையே அன்பு மேலோங்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

தொழில், வியாபாரம் வளர்ச்சி முகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 2018 பிப். 13- க்கு பிறகு  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குரு பகவான் 2018 ஏப். 9- முதல்  செப். 3- வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுவதால் எதிர்பார்ப்பு நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள்  எதிர்பார்த்த நற்பலனைக் காணலாம். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.மாணவர்கள் 2018 பிப்.13- க்கு பிறகு முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டியில் வெற்றி கிடைக்கும். குரு பகவானின் வக்ர காலத்தில் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.  வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். சமரசபேச்சு  மூலம் தீர்வு காண்பது நல்லது.  பெண்கள் அக்கம்பக்கத்தாரிடம் நெருக்கத்தை தவிர்க்கவும். ஆடம்பர செலவைக் குறைப்பது அவசியம். 2018 செப்.3க்கு பிறகு திருமணம்  இனிதே கைகூடும்.  சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை சனிக்கிழமையில் ராமபிரான் வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !