உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடுங்க .... பாட்டு பாடுங்க....!

பாடுங்க .... பாட்டு பாடுங்க....!

கேதுவுக்கு அதிதேவதையான விநாயகர், ராகுவுக்கு  அதிதேவதையான துர்க்கையை வழிபட்டால் கெடுபலன் குறைந்து நன்மை அதிகரிக்கும்.

பணியென உருவமாகி பட்சமாய் அமுது உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோகம் போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்
சித்திர வண்ணமே திருந்து மேனியும்
அத்துவசம் பொருமணி கொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்.

விநாயகர் வணக்கம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே!

துர்க்காதேவி சரணம்

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்பவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !