உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொல் வன்மை வேண்டும்

சொல் வன்மை வேண்டும்

ஒரு விஷயத்தைச் சொல்லும் போது  தெளிவாகவும் கருத்தாழம் மிக்கதாகவும், ஈர்க்கும் வகையிலும் சொல்ல வேண்டும். படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் புரிய வேண்டும். இவ்வாறு பேசுவதில் வல்லவர் நாயகம். அவர் அரபுநாட்டில் பிரசாரம் செய்து வரும் வேளையில், ஏமன் மாகாணத்தை சேர்ந்த ஒரு கோத்திரத்தின் தலைவரான அம்ரு அலி தவ்ஸி என்பவர் மெக்கா வந்தார். அவரிடம், நபிகளின் எதிர்ப்பாளர்களான குறைஷி இனத்தவர், நாயகத்தின் போதனைகள் பற்றி இல்லாததும், பொல்லாததுமாக கூறி அவர் மீது வெறுப்பு ஏற்பட வைத்தனர். குறைஷி இனத்தலைவர் ஒருவர் அம்ருவிடம்  நீங்கள் நாயகத்தின் போதனைகளைக் கேட்கக் கூடாது. அதற்கு உறுதி தாருங்கள் என்றார். அம்ருவும் தன் காதில் பஞ்சை வைத்துக் கொள்வதாக உறுதி கூறி கையில் சிறிது பஞ்சையும் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் கஃபாவுக்குச் சென்றார். அங்கே நாயகம் தொழுது கொண்டிருந்தார். அவர் கூறிய இறை வசனங்கள் காற்றில் மிதந்து வந்தன. அவை அம்ருவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன.

நாயகம்  கூறிய திருவசனங்களின் சொல்லழகு, நடையழகு, இனிய குரல், தெளிவான உச்சரிப்பு ஆகியவை அம்ருவை ஈர்த்தன. அவர் கையில் இருந்த பஞ்சு தானாக கீழே விழுந்து விட்டது. நாயகம் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பும் போது அம்ரு நிற்பதைக் கவனிக்கவில்லை. அவர் வீட்டுக்குச் சென்று விட்டார். அம்ரு அவரது இல்லத்துக்கே சென்று  “பெருமானாரே! நான் உங்கள் அடிமை, உங்கள் சீடன் என்றார். நபிகளார் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உபசரித்தார். அம்ரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சண்டை போட வந்தவரை, சமாதானமாகப் போகச் செய்த சொல்வன்மைக்குச் சொந்தக்காரர் நாயகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !