பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1 hours ago
பரமக்குடி; பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயிலில் பங்குனி வெள்ளிக்கிழமை நாளில் அபிஷேக ஆராதனை நடந்தது. கோயிலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று மாலை யுகாதி விழாவையொட்டி அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் வெள்ளி சூலம் ஏந்தி மூலவர் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.