உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம நவமி உத்சவம்; ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர்

ராம நவமி உத்சவம்; ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர்

சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி உலா வந்து அருள்பாலித்தார்.


திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ராமநவமியை முன்னிட்டு 9 நாட்கள் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ராமநவமி உற்சவம் 19ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 27ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலை ராமபிரானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு வாகன சேவைகள் நடைபெறும். விழாவை முன்னிட்டு ராம நவமி உத்சவ இரண்டாம் நாளில், ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27ம் தேதி திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகத்துடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !