பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கம்
ADDED :1 days ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கியது. மார்ச் 20 ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. பத்து நாள் திருவிழாவாக அம்மனுக்கு தினமும் அபிஷேக ஆராதனை நடக்கிறது. மார்ச் 28ஆம் தேதி பால்குடம் எடுத்தல், கரகம் எடுத்தல், மார்ச் 30ம் தேதி பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், கரகம் செலுத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிருங்காக்கோட்டை நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.