உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு; கோவர்தன கிரி பிரதட்சணம் செய்து வழிபாடு

மதுராவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு; கோவர்தன கிரி பிரதட்சணம் செய்து வழிபாடு

மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.


ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்து ஆரத்தி எடுத்ததுடன், புனிதமான கோவர்தன கிரி பிரதட்சணத்தையும் மேற்கொண்டார். தனது பிரதட்சணத்தின் போது, ​​சர்வதேச வன தினத்தை முன்னிட்டு அவர் ஒரு மரக்கன்றை நட்டார். மேலும், புனிதமான மான்சி கங்கா ஏரியிலும் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்தினார். மதுராவில் 7-கோஸ் தொலைவுள்ள கோவர்தன கிரி பிரதட்சணத்தை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெறும் கால்களில் நடந்து மேற்கொண்டார். இந்தப் புனிதமான பிரதட்சணத்தை மேற்கொண்ட முதல் ஜனாதிபதி இவர் என்பது குறிபிடத்தக்கது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !