முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா; பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED :1 minutes ago
மேலூர்; மேலூர் மில்கேட் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 12 காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. மார்ச் 20 திருவிளக்கு பூஜையும், இன்று மார்ச் 21 சாலக்கரையான் ஊருணியில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் அழகு குத்தியும் கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும், அம்மன் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மார்ச் 22 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், பூத்தட்டு ஊர்வலமும் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.