உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

கோவை; பங்குனி மாதம் முதல் சனி கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம், அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜை நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்  நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !