திருக்கோவிலூரில் ரமலான் சிறப்பு தொழுகை
ADDED :210 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் இன்று காலை 9:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. முகமது ஜாபர் மௌலானா தலைமையில், இமாம் ஆஷிப் உள்ளிட்டவர்கள் சிறப்பு பிரசங்கம் செய்தனர். இமாம் ராஷித் தொழுகையை முன்நின்று நடத்தினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுடனர். நிறைவாக ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி சகோதரத்துவத்தை பரிமாறிக் கொண்டனர்.