உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை தெரு கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயில் தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 38ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. கோயிலில் காலை துவங்கி அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அடுத்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின்னர் இரவு அன்ன வாகனத்தில் கவுரி அம்மன் மலர் அலங்காரத்தில் உலா வந்தார். ஏராளமான பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி வலம் வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் மலர் அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !