உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குதிரை வாகனத்தில் கவுமாரியம்மன் அம்மன் உலா

குதிரை வாகனத்தில் கவுமாரியம்மன் அம்மன் உலா

பெரியகுளம்: சிறப்பு வாய்ந்த பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா ஜூலை 10ல்  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கண் அபிஷேகம் நடந்தது. பத்து நாட்கள் திருவிழாவில் அம்மன் சிம்மம், குதிரை, யானை, பூபல்லாக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நேற்று 9ம் நாள் திருவிழாவில் கம்பத்திற்கும், அம்மனுக்கும்  தண்ணீர் எடுத்து  பக்தர்கள் பலர் ஊற்றினர். மாவிளக்கு பூஜை நடந்தது.  முக்கிய நிகழ்வான  இன்று ஏராளமானோர் அக்னிச்சட்டி எடுத்து வழிபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !