தாயமங்கலம் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்
ADDED :3006 days ago
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூழ் ஊற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்கள் கோயில் முன் கூழ் ஊற்றி, மாவிளக்கு மற்றும் எலுமிச்சையில் தீபம் ஏற்றி முத்துமாரியம்மனை வணங்கினர். ராஜபுஷ்பம் : கோடைக்கால முடிவிலும், மழைக்கால ஆரம்பத்திலும் வரும் மாதம் ஆடியாகும். இந்த காலத்தில் மனிதர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். எனவே நம்மை பாதுகாத்து கொள்ளவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சரியான மருந்தாக இருப்பது இந்த ‛கூழ் தான். இதையறிந்த நம் முன்னோர்கள், ஆடி மாதத்தில் கோயில்களில் வேப்பிலை கட்டியும், கூழ் ஊற்றியும் வந்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது என்றார்.