திருவண்ணாமலை கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :3039 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகர காவல் தெய்வமாக உள்ள தூர்கையம்மன் கோவிலில், ஆடி மாத முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அலங்கராத்தில் தூர்க்கையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இரட்டைகாளியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு நடந்த தீ மிதி விழாவில் பெண்கள் மற்றும் சிறுவர் ஏராளமான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி அம்மனை தரிசனம் செய்தனர்,