பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :5076 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவார 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறுகிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவார 108 வலம்புரி சங்காபிஷேகம் நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, ஹோமம், வேதபாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. வரும் 28ம் தேதி 2வது வார சோமவார சங்காபிஷேகமும், டிச.,5ம் தேதி மூன்றாவது வார சங்காபிஷேகம், டிச., 12ம் தேதி நான்காவது வார சங்காபிஷேக விழா நடைபெறுகிறது.