உறுப்புகள் தந்தது எதற்காக?
ADDED :3156 days ago
இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் உறுப்புகளை படைத்திருக்கிறான். ஆனால் மனிதன் அவற்றைக் கொண்டு தவறான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறான். குர்ஆனில் “அவர்களுக்கு (மனிதர்களுக்கு) இதயங்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்து உணர்வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. ஆயினும் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருங்களைப் போன்றவர்கள். ஏன்... அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது. மிருகங்கள் கூட ஏதோ ஒரு வகையில் மனித இனத்துக்கு உதவுகின்றன. மனிதர்கள் பேசும் திறன், உணரும் திறன் பெற்றிருந்தும் அவற்றால் பிறருக்கு உதவ மறுப்பது தண்டனைக்கு வழிவகுக்கும்.