மமதையை விடுங்கள்
ADDED :3155 days ago
என்னை விட்டால் பெரிய ஆள் இந்த உலகத்தில் யார்? என்று மமதையுடன் மார்தட்டுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. தான் எந்த பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. இறைவனே யாவற்றையும் நன்கறிபவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். இறைவனை தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்கள். உங்கள் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் நீதியுடன் பேசுங்கள். மமதையைக்கைவிட்டால் தான் இறைவனின் அன்பைப் பெற முடியும்.