நீதியைக் கடைபிடியுங்கள்
ADDED :3155 days ago
நபிகள் நாயகம் தன்னிடம் இறைவன் எடுத்து வைத்த கட்டளைகளை மனித சமுதாயத்துக்கு சொல்கிறார்.
*பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
* வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.
*மானக்கேடான செயல்களின் அருகில் கூட செல்லாதீர்கள். அவை வெளிப்படையாக இருந்தாலும் மறைவானவையாக இருந்தாலும் சரியே.
*இறைவன் கண்ணியத்திற்குரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்.
*அனாதைகளின் செல்வத்தை அவர்கள் பருவ வயதை அடையும் வரை, நியாயமான முறையில் அன்றி நெருங்காதீர்கள். (அவர்கள் பொருளில் கைவைத்து விடக்கூடாது)
*அளவையிலும் நிறுவையிலும் நீதியைக் கடைபிடியுங்கள்.