பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்
ADDED :3038 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு அம்மன் திருத்தேர் திருவிழா நேற்று நடந்தது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரிய நாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா முன்னிட்டு நேற்று கடந்த 17 ம்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று 25ம் தேதி பூரம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். காலை 7 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேர் வீதியுலா நடந்தது. இன்று 26ம் தேதி ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு உற்சவமும் நடக்கிறது.