உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் பழனியப்பர் கோவில் அடிவாரம்: போர்வெல் மின் இணைப்பு தேவை

ராசிபுரம் பழனியப்பர் கோவில் அடிவாரம்: போர்வெல் மின் இணைப்பு தேவை

ராசிபுரம்: பழனியப்பர் கோவில் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட போர்வெல் குழாய்க்கு, மின் இணைப்பு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேளுக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட, பழனியப்பர் கோவில் அடிவாரத்தில், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு போடப்பட்டது. தண்ணீர் வரத்து குறைவின் காரணமாக, கடந்த நான்கு மாதத்திற்கு முன், மேலும், ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்காலிக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது, இந்த ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படாமல் கடந்த, நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்று நீரானது, பேளுக்குறிச்சி, பள்ளிப்பட்டி பஞ்சாயத்துக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது, ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படாததால் மேற்கண்ட பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு கொடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !