உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி கோவில் உண்டியலில் ரூ.54.68 லட்சம் காணிக்கை வசூல்

பண்ணாரி கோவில் உண்டியலில் ரூ.54.68 லட்சம் காணிக்கை வசூல்

பண்ணாரி: பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலாக, பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மாதம் தோறும் எண்ணப்படுகிறது. மொத்தம் உள்ள, 20 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. ராஜன்நகர் ஐ.ஓ.பி., வங்கி ஊழியர், கோவில் பணியாளர்கள், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி மாணவ, மாணவியர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 54.68 லட்சம் ரூபாய், காணிக்கைகளாக செலுத்தப்பட்டிருந்தது. இதில்லாமல், 485 கிராம் தங்கம், 737 கிராம் வெள்ளியும் இருந்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !