ஊட்டியில் திருக்கரக உற்சவ விழா திரளான பக்தர் பங்கேற்பு
ADDED :3038 days ago
ஊட்டி : ஊட்டி நொண்டிமேடு பகுதியில் உள்ள பொக்காபுரம்மன் சித்தர்பீடம் சார்பில் மூன்றாம் ஆண்டு திருக்கரக உற்சவ விழா நடந்தது.
இந்த கோவிலில், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், நாள்தோறும் கூழ் வார்த்தல், சிறப்பு ஆராதனை, அலங்கார பூஜை, மஞ்சள் குங்குமம் வார்த்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முக்கிய திருவிழாவான நேற்று, ஊட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து, திருத்தேர் மற்றும் கரகம் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் கரகம் ஏந்தி சென்றனர். கரகம், திருத்தேர் ஊட்டி மார்க்கெட் வழியாக கோவிலை சென்றடைந்தது. மதியம் 2:00 மணிக்கு அபிேஷகம் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.