உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை 10:30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனும்,சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா அடுத்த மாதம் 4 ந்தேதி நடைபெற உள்ளது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் இரவு மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான ஏற்பாடுகளை மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் முருகேசன், ஸ்தானிகர் அழகிய சுந்தரபட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !