பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூர உற்சவ விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. விழாவையொட்டி, கால ை 9:30 மணிக்கு கரியகாளியம்மன் கோவலிலிருந்து, பால் குடங்கள், மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின், 10:30 மணிக்கு அபிேஷகம், ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணி திருவிளக்கு பூஜையும், இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாகசதுர்த்தியையொட்டி , சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன், வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், ஆடிப்பூர பெருவிழாவையொட்டி வரமிளகாய் யாகம் நடத்தப்பட்டது. பிறகு, துர்க்கை அம்மனுக்கு பல்வேறு அபிேஷக பூஜையும்,சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. விழாவில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.