உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

சேலம் கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

சேலம்: ராகு - கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, கலச ஸ்தாபனம், விக்னேஸ்வரர் பூஜை, 5:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6:15 மணிக்கு ராகு, கேது பரிகார சாந்தி ஹோமம், நவக்கிரஹ கலச பூரண அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

* பனமரத்துப்பட்டி, நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடந்த பரிகார யாக பூஜையில், மூலிகை, பால், பழம், குச்சி உள்ளிட்ட தெய்வீக பொருட்களை, யாக குண்டத்தில் போட்டு, மக்கள் வணங்கினர். அங்குள்ள ராகு, கேது சிலைக்கு, பால், இளநீர், தயிர், மஞ்சள், பன்னீர் கொண்டு அபி?ஷகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் விளக்கு ஏற்றி வைத்து, வழிபட்டனர். மேலும், தாரமங்கலம், ராமிரெட்டிப்பட்டி புற்று நாகாத்தம்மன் கோவிலில், சிறப்பு யாக பூஜை நடந்தது.

* ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், மதியம், 12:45 மணிக்கு சிறப்பு ?ஹாமம், ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில், சிறப்பு ஹோமம், அபிஷேகம், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !