கிருஷ்ணகிரி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், ராகு, கேது இடப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நேற்று பகல், 12:39 மணிக்கு, ராகு கிரகம், கடகத்திற்கும், கேது கிரகம், மகரத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைந்தன. இதையொட்டி, பல்வேறு கோவில்களில், நேற்று ராகு, கேது பிரீத்தி கால சர்ப தோஷ நிவாரண பூஜை நடந்தது. பின், அபி?ஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதேபோல், தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, பகல், 12:00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின், சுவாமிக்கு பால், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர், தயிர் உட்பட, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள, ராகு, கேது உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நவகிரக கோவில்களில், ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.