பவளநிற வள்ளியம்மனுக்கு வளைகாப்பு
ADDED :2993 days ago
சாயல்குடி, ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிற வள்ளியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. 500 வளையல்களைக்கொண்டு அம்மனின் திருக்கரக்களில் பூட்டப்பட்டது. பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். லலிதா சகஸ்ரநாமம், சக்தி ஸ்தோத்திரம் உள்ளிட்ட அர்ச்சனை செய்யப்பட்டன. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கடலாடி, மாரியூர் மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனர். வரும் ஆடி 18ம் பெருக்கு அன்று கோயில் வளாகத்தில் 1000 பெண்களுக்கு சுமங்கலி பூஜைகள் நடக்க உள்ளது.