உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளியை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு

ஆடி வெள்ளியை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு

திருத்தணி:ஆடி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெண்கள் பொங்கலிட்டு, அம்மனை தரிசித்தனர்.ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலை தணிகாசலம்மன், மடம் கிராமம் வனதுர்க்கையம்மன் உட்பட பெரும்பாலான அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. காலையில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கலிட்டு, அம்மனை தரிசித்தனர். காசிநாதபுரம் பகுதி யில் உள்ள எல்லையம்மன் கோவிலில் ஆடி உற்சவம் ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !