உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓலையக்கா நோன்பு: பெண் குழந்தைகளுக்கு வழிபாடு

ஓலையக்கா நோன்பு: பெண் குழந்தைகளுக்கு வழிபாடு

அன்னுார்:உம்மத்துார் உருகாதேஸ்வரி அம்மன் கோவிலில், பெண்குழந்தைகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கர்நாடக மாநிலத்தில், முன்னுாறு ஆண்டுகளுக்கு முன், ஒரு நிர்பந்தத்தால் மைசூர் பகுதியிலிருந்து, ஏராளமான குடும்பங்கள் தமிழகம் நோக்கி வந்தன. அப்போது அதில் எட்டு கன்னிப்பெண்கள்,தங்கள் கற்பை காப்பாற்றிக்கொள்ள ஓலைகளை குவித்து, தீக்குளித்து உயிர் நீத்தனர். அவர்களின் நினைவாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட உருகாதேஸ்வரி அம்மன் சிலை, அன்னுார் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செட்டிபாளையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, உம்மத்துார் உருகாதேஸ்வரி அம்மன் கோவில்கட்டப்பட்டது.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் ஓலையக்கா நோன்பு நடக்கிறது. நேற்று முன் தினம் செட்டிபாளையம் கோவிலில், செல்வ விநாயகர், உருகாதேஸ்வரி அம்மன், மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. பெண் குழந்தைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கோவிலில், பனை ஓலையால், செய்யப்பட்ட அம்மன் உருவத்துடன், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பல பொருட்கள், கன்னிப்பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. குழந்தைகளை அம்மனாக நினைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஊட்டி, பஜனை குழுவின் பஜனை நடந்தது. பெண்கள் நடனமாடினர். மதியம் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !