அதிர வைத்த பெண்
காஞ்சிபுரம் அருகிலுள்ள திருவாலி திருநகரியில் திருமங்கையாழ்வார் பிறந்தார். ஒருமுறை ராமானுஜர் இங்கு விஜயம் செய்தார். அப்போது ஒரு தாழ்த்தப்பட்ட குலப்பெண் ராமானுஜருக்கு நெருக்கமாக வந்து கொண்டிருந்தார்.அம்மா! அடியார் கூட்டத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிச் செல்லக்கூடாதா? என்று கேட்டார் அவர். எங்கே ஐயா! என்னை ஒதுங்கச் சொல்கிறீர். வலதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருமங்கையாழ்வாருக்கு மந்திர உபதேசம் செய்த இடம். இடதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருவாலிப்பெருமாள் இருக்கும் இடம். உலகம் முழுவதும் உலகளந்தான் இருப்பிடம் தானே! இதிலே எனக்கென ஏது தனி இடம், என்று பதிலளித்தாள். அவளுடைய முதிர்ச்சியான பேச்சைக் கேட்டு அதிர்ந்த ராமானுஜர், அம்மா! தாங்கள் சொல்வதே நிஜம். இறைவன் இல்லாத இடமேது! இதில் தாழ்ந்தவன், உயர்ந்தவன் வாழ்வதற்குரிய தனியிடம் ஏது! இந்த அரிய கருத்தை உணர்த்திய நீ தான் சங்கு, சக்கர சின்னங்களை இட்டுக் கொள்ள தகுதியானவள் என்று சொல்லி அவளைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.