அரகண்டநல்லுார் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :2996 days ago
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா, கடந்த 18ம் தேதி துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம்‚ அலங்காரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு மகா அபிஷேகம்‚ சந்தனகாப்பு அலங்காரம் சக்திகரகம் புறப்பாடு நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.